26 பள்ளிகள் பங்கேற்கும் தென் சென்னை தடகளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

26 பள்ளிகள் பங்கேற்கும் தென் சென்னை தடகளம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னையில், 26 பள்ளிகள் பங்கேற்கும், மண்டல அளவிலான தடகளப் போட்டி, இன்று துவங்குகிறது.தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, ஆர்.கே.எம்., மைதானத்தில், மேற்கு மாம்பலம் பகுதி, அஞ்சுகம் மேல்நிலைப் பள்ளி சார்பில், மண்டல அளவிலான, தென் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கான, தடகளப் போட்டி இன்று துவங்குகிறது.இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டியில், மொத்தம், 26 பள்ளிகளை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்துகின்றனர்.இதைத்தொடர்ந்து நாளை, மாணவியருக்கான போட்டி, இதே பகுதியில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X