மணல் கடத்திய டிராக்டர், வண்டிகள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய டிராக்டர், வண்டிகள் பறிமுதல்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மங்கலம்பேட்டை: ஓடையில் இருந்து மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆலடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் நேற்று குருவன்குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓடையில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்த அதேபகுதியைச் சேர்ந்த முருகவேல், 37; என்பவரை கைது செய்தனர். மேலும், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.பண்ருட்டிபுதுப்பேட்டை போலீசார் நேற்று விடியற்காலை சிறுகிராமம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மலட்டாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான கிழக்குமருதுார் கிருஷ்ணமூர்த்தி,41; சதாசிவம்,51; வீரப்பெருமாநல்லுார் கேசவன்,52; குப்புசாமி,57; ஆகியோரை கைது செய்தனர்.நெல்லிக்குப்பம்நெல்லிக்குப்பம் பகுதியில் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆறுகளில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., அமைத்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மணல் கடத்தி வந்த மூன்று மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X