வேளாண்மை விழிப்புணர்வு ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண்மை விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: இயற்கை வேளாண்மை குறித்து வேளாண் புல மாணவிகளின் விழிப்பணர்வு ஊர்வலம் நடந்தது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள், மஞ்சக்கொல்லை கிராமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருகட்டமாக இயற்கை வேளாண்மை குறித்து மஞ்சக்கொல்லை இளைஞர்கள் மற்றும் அப்பகுதி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.ஊர்வலத்திற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கலைச்செல்வம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன், ஊர் தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சம்பத்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில் விவசாயம் என்பது வியாபாரம் அல்ல. அது நம் வாழ்க்கை முறை, நமது முன்னோர்கள் போன்று இன்றைய இளைய சமுதாயத்தினர் விவசாயத்தை வாழ்க்கை முறையாக பின்பற்றினால் நம் உடல் நலமும், விவசாயமும் காப்பாற்றப்படும் என்பதை வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X