மங்கலம்பேட்டை அரசு பள்ளி தரம் உயர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மங்கலம்பேட்டை அரசு பள்ளி தரம் உயர்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள நுாறு உயர்நிலைப் பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மாதம் 5 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 7 ம் தேதி மேலும் 95 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் மங்கலம்பேட்டை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியும், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.அதனையொட்டி இப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டிற்கு பிளஸ் 1 மற்றும் , பிளஸ் 2 வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X