கொளப்பாக்கத்தில் ஆக., 16ல் மரப்பூங்கா திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொளப்பாக்கத்தில் ஆக., 16ல் மரப்பூங்கா திறப்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வண்டலுார்:வண்டலுார் அடுத்த கொளப்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் மரப்பூங்கா, 16ல் திறக்கப்பட உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வண்டலுார் அடுத்த கொளப்பாக்கத்தில், மாநில வன ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இதன் எதிரே, 20 ஏக்கர் பரப்பளவில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2017 ஏப்ரலில், மரப்பூங்கா அமைக்கும் பணி துவங்கியது. இதில், 300 வகையான தாவரங்கள் நடப்பட்டுள்ளன. வண்டலுார் மலையிலிருந்து வெளியேறும் மழைநீர் செல்ல ஏதுவாக, 'யூ' வடிவில் கால்வாய்கள் மற்றும் தண்ணீரை தேக்கி வைக்க, நான்கு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.அதேபோல், தாவரங்களின் செயல் விளக்க கூடமும் கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், பூங்கா அமைக்கும் பணிகள், 90 சதவீதம் முடிந்து உள்ளதாகவும், விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும், வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மரப்பூங்காவில், நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக முடிவடையும். ஆக.,16ம் தேதி, பூங்கா திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X