மணல் கடத்திய 82 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய 82 பேர் மீது வழக்கு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மணல் கடத்தியதாக 82 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, மணல் கடத்துவோர், மணல் கடத்தலுக்கு பயன்படும் வாகனங்களின் உரிமையாளர்கள், திருட்டு மணலை வாங்குபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.பி., சரவணன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி முதல், நேற்று வரை மணல் கடத்தியதாக 4 டிப்பர் லாரிகள், 10 டிராக்டர்கள், 2 வேன்கள், 56 மாட்டு வண்டிகள் என, மொத்தம் 72 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மணல் கடத்துவோர், மணல் கடத்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் என, மொத்தம் 82 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X