சென்னை மாவட்ட சதுரங்கம் 16 மாணவர்கள் தகுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மாவட்ட சதுரங்கம் 16 மாணவர்கள் தகுதி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:பள்ளிகளுக்கு இடையேயான மண்டல போட்டி யில் வெற்றி பெற்ற, 16 மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.கொடுங்கையூர், எப்.இ.எஸ்., மெட்ரிக் பள்ளியில், மண்டல அளவிலான, வடசென்னை பள்ளிகளுக்கு இடையேயான, சதுரங்க போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும், 18 பள்ளிகளைச் சேர்ந்த, 140 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.இந்த போட்டியில், 11, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில், இருபாலருக்கும் போட்டிகள் நடந்தன. இதில், 17 வயதிற்குட்பட்டோருக்கான, மாணவர் பிரிவில், வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் மாணவியர் பிரிவில், எம்.கே.பி., அரசு பள்ளியை சேர்ந்த, ஓவியா, சாரதா வெற்றி பெற்றனர்.மேலும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மாணவர் பிரிவில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பள்ளியை சேர்ந்த, ஜெயசெந்தில் மற்றும் மாணவியர் பிரிவில், டான்போஸ்கோ பள்ளியை சேர்ந்த, பிருந்தாஸ்ரீ ஆகியோர் வென்றனர். போட்டியில் வென்ற இந்த மாணவர்கள் உட்பட, மொத்தம், 16 மாணவ - மாணவியர், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X