இடுக்கியில் கனமழையால் ரூ.100 கோடி சேதம் மாங்குளத்தில் ராணுவ முகாம்| Dinamalar

இடுக்கியில் கனமழையால் ரூ.100 கோடி சேதம் மாங்குளத்தில் ராணுவ முகாம்

Added : ஆக 13, 2018
Advertisement

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் பயிர்கள், ரோடு, கட்டடங்கள் சேத மதிப்பு ரூ.100 கோடியை தாண்டும் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும்கனமழையால்,தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுவருகின்றன. குறிப்பாக மூணாறு அருகே அடிமாலி, மாங்குளம் பகுதிகளில் பாதிப்புகள் அதிகம். மாங்குளம் பகுதி நிலச்சரிவால் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், அங்கு ராணுத்தினர் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்ததால் செருதோணி அணை திறக்கப்பட்டது. அதனால் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தடியம்பாடு, கரிம்பன் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆலோசனை : மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, கட்டப்பனை அரசு கல்லுாரியில், கேரள மின்துறை அமைச்சர் மணி, வனத்துறை அமைச்சர் ராஜூ தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பயிர்கள், ரோடு, கட்டடங்களின் முதல்கட்ட சேத விபரங்களை அதிகாரிகள் தெரிவித்தனர். விளைநிலங்கள், விளைபொருட்கள் சேதமதிப்பு மட்டும் ரூ.100 கோடியை தாண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நிவாரண முகாம் : மாவட்டத்தில் இடுக்கி மற்றும் தேவிகுளம் ஆகிய தாலுகாக்களில் 17நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அதிகமாக கீரிதோடு பாரிஸ் ஹாலில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 388 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு,குடிநீர், மருத்துவம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கன மழை தொடரும் என்பதால், மாவட்ட நிர்வாகம்அனைத்து முன்ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது. அமைச்சர் ராஜூ, அடிமாலியில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார். நிலச்சரிவில் சிக்கி5 பேர் பலியான குடும்பத்தில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வரும்ஹசன்குட்டியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X