திருவக்கரையில் ஜோதி தரிசனம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவக்கரையில் ஜோதி தரிசனம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலம்: மயிலம் அடுத்த திருவக்ரையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளியம்மனுக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு வக்கிரகாளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிற்பகல் 12 மணிக்கு அமாவசை ஜோதி காண்பிக்கப்பட்டது. ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து பிற்பகல் 1.00 மணியளவில் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கினார்கள். மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளி, குண்டலிமா முனிவர், வரதராஜபெருமாள், வள்ளி, தெய்வானை சுப்பரமணியர், வக்கிரசனி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறை அலுவலர்கள் ஜோதி, நாகராஜன், மேலாளர் ரவி, குருக்கள் சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X