வடவெட்டி அங்காளம்மன் கோவிலில்  ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடவெட்டி அங்காளம்மன் கோவிலில்  ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் 

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேல்மலையனுார் தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் 101 வது மாதமாக கடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் விநாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.மாலை 6 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடந்து.தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சள் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர்புண்ணியமூர்த்தி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X