விழுப்புரத்தில் வருடாந்திர ஆய்வுப்பணி நகரில் இன்று மற்றும் நாளை 'பவர் கட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் வருடாந்திர ஆய்வுப்பணி நகரில் இன்று மற்றும் நாளை 'பவர் கட்'

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் வருடாந்திர ஆய்வு பணிகளை யொட்டி, இன்று மற்றும் நாளையும் மின்தடை செய்யப்படுகிறது என விழுப்புரம் மின் உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :நந்தவனம் மற்றும் வி.அகரம் மின்பாதையில் இன்று (13ம் தேதி) மற்றும் நாளை (14ம் தேதி) வருடாந்திர பருவ ஆய்வு பணி நடைபெறுகிறது. இந்த பணிகளையொட்டி, இன்று(13ம் தேதி) சென்னை நெடுஞ்சாலை, வண்டிமேடு, மந்தக்கரை, வடக்கு தெரு, மேல்தெரு, விராட்டிக்குப்பம் பாதை, கே.வி.ஆர்., நகர், பாப்பான்குளம், ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.அதே போல், நாளை (14ம் தேதி) விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி, வி.மருதுார் மேடு, பானாம்பட்டு ரோடு, காந்தி நகர், மகாராஜபுரம், தாமரைக்குளம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மகாதேவன் நகர், கணேஷ் நகர், கிழக்கு பாண்டி ரோடு, குருவிலாஸ், திருநகர், எம்.குச்சிப்பாளையம், மாதிரிமங்கலம், பொய்யாபாக்கம், காகுப்பம், ராகவன்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது ,என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X