முல்லை பெரியாரில் தண்ணீர் திறக்க இந்திய கம்யூ., முத்தரசன் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முல்லை பெரியாரில் தண்ணீர் திறக்க இந்திய கம்யூ., முத்தரசன் கோரிக்கை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விழுப்புரம்: முல்லை பெரியார் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை வைத்துள்ளார்.விழுப்புரத்தில் விவசாயிகள் சங்க மாநில மாநாடு நடக்க உள்ளது. இது குறித்து இந்திய கம்யூ.,கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக வழக்குகள் பதிந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சிலை கடத்தல் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது உண்மை தான்.சிலை கடத்தல் வழக்கில், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன் என்பவரை சேர்த்துள்ளனர். அவர் மீது போட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.சிலை கடத்தல் வழக்கில் பழிவாங்கும் நோக்கம் உள்ளது. இதை தவிர்த்து, சிலை கடத்தல் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.இவ்வழக்கில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் தான், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது.கேரளாவில் பெய்து வரும் பருவமழையால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கேரளா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்து, திறக்கப்பட்டுள்ள தண்ணீர் டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முல்லைபெரியார் அணையில் இருந்து, வைகை அணைக்கு தண்ணீர் திறந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் அனுப்பி பாசனத்திற்கு வழிவகை செய்ய வேண்டும், என்று பேட்டியின் போது, தெரிவித்தார்.பேட்டியின் போது, விழுப்புரம் மாவட்ட செயலாளர் சரவணன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X