நல்லாவூர் கூட்டுறவு வங்கிக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாவூர் கூட்டுறவு வங்கிக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வானுார்: நல்லாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ஜானகிராமன் தேர்வு செய்யப்பட்டார்.வானுார் அடுத்த நல்லாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு தலைவர், துணை தலைவர்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.இதற்கான மனு தாக்கல் காலை 10.00 மணிக்கு நடந்தது.வங்கி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பச்சைமுத்து முன்னிலையில், தலைவர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஜானகிராமன், துணை தலைவர் பதவிக்கு ஜெயராமன் மனு தாக்கல் செய்தனர்.வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தலைவர் ஜானகிராமன், துணைத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், வங்கி செயலாளர் சந்திரசேகர், இயக்குனர்கள் லட்சுமணன், ராமு, ஆறுமுகம், வீரப்பன், ஐயம்மாள், தேவி, சிவபிரகாசம், வேல்முருகன், வேண்டாமணி மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X