நகர கூட்டுறவு வங்கியின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகர கூட்டுறவு வங்கியின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கியின் தலைவராக சேகர் பதவியேற்றுக்கொண்டார்.திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு தேர்தல் மூலம் தலைவர், துணைத்தலைவர் உட்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவராக சேகர், துணைத்தலைவராக சக்கரவர்த்தி, இயக்குநர்களாக கணேசன், துரை, சேட்டு, திருமகள், நரேந்திரகுமார், கற்பகம், அண்ணாதுரை, பிரகாஷ், வரலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு விழா நடந்தது. இதில், தேர்தல் அலுவலர் வாசுதேவன், பங்கேற்று, புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதைத்தொடர்ந்து புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட சேகர், சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.பதவியேற்பு விழாவில், வங்கி மேலாண் இயக்குநர் கோமலா, வங்கி மேலாளர் விஜயக்குமார், உதவி மேலாளர் செல்வம், வங்கி அதிகாரி ஜெயக்குமார் மற்றும் திண்டிவனம் நகர அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன், திண்டிவனம் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் முகமது ெஷரீப், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X