'பெரியாறு அணை நீர் வேண்டாம்' பிரார்த்திக்கும் இடுக்கி மக்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பெரியாறு அணை நீர் வேண்டாம்' பிரார்த்திக்கும் இடுக்கி மக்கள்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
'பெரியாறு அணை நீர் வேண்டாம்'  பிரார்த்திக்கும் இடுக்கி மக்கள்

கூடலுார்: கேரளாவில் பெய்யும் கன மழையால் இடுக்கி அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்படும் நீர் பல கிராமங்களை சூழ்ந்துள்ளது. இச்சூழலில் பெரியாறு அணை நீரும், இடுக்கி அணைக்கு வந்திருந்தால் பாதிப்பு அதிகமாகியிருக்கும். 'இதன்மூலம் பெரியாறு அணையை வைத்து அரசியல் நடத்தியவர்கள் குறித்து கேரள மக்கள் சரியாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது' என தமிழக விவசாயிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து ஆக., 8 முதல் கனமழை பெய்கிறது. இடுக்கி அணை நீர்மட்டம் உயர்ந்ததால் 26 ஆண்டுக்குப்பின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அந்த நீர் வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. இந்த அணையின் (மொத்த உயரம் 554 அடி) 36 ஆயிரம் ஏக்கரில் 72 டி.எம்.சி., நீரை தேக்க முடியும். ஆனால் பெரியாறு அணையில் (மொத்த உயரம் 152 அடி) 15 டி.எம்.சி., மட்டுமே தேங்கும்.
நிம்மதி : தற்போது இடுக்கி அணையில் இருந்து வெளியேறும் நீர், கனமழை காரணமாக, அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெரியாறு அணையில் 142 அடி நீர் தேங்கி, அதற்கு மேல் வரும் நீர் இடுக்கி அணைக்கு சென்றிருந்தால் கேரள மக்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கும். தற்போது பெரியாறு அணையில் 135.20 அடி நீர் மட்டுமே உள்ளது. இது கேரள மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. 'பெரியாறு அணை நீர் தற்போது இடுக்கி அணைக்கு வந்து விடக்கூடாது' என கேரள மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நாடகம் : இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூறியதாவது: பெரியாறு அணையில் தேங்கும் நீரை விட ஐந்து மடங்கு அதிகமாக இடுக்கி அணையில் தேக்கலாம். அதன் மூலம் மின் உற்பத்தி மட்டுமே செய்ய முடியும். விவசாயத்திற்கு பயன் இல்லை. மின் உற்பத்திக்காக கூடுதல் நீரை இடுக்கி அணைக்கு கொண்டு வர, பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து குறைக்க வேண்டும் என அம்மாநில அரசியல்வாதிகள் நாடகம் நடத்தினர். இதனால் மொத்த உயரம் 136 அடியாக குறைந்தது. உச்சநீதிமன்றம் மூலம் 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 'இடுக்கி அணைக்கு பெரியாறு அணை நீர் வந்தால் பாதிப்பு மேலும் அதிகமாகும்' என கேரள மக்களை உணரச் செய்துள்ளது இந்த மழை.'இடுக்கி அணையைக் காப்பாற்ற பெரியாறு அணை உயரத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற சூழல் உருவாகியுள்ளது.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramganesh - Karaikudi,இந்தியா
13-ஆக-201811:44:54 IST Report Abuse
Ramganesh கேரளாவில் உள்ள சுற்றுலா தளங்களில் வாடகை என்ற பெயரில் கொள்ளையடித்தார்கள் அதற்கான தண்டனை கடவுள் கொடுத்திருக்கிறார் .இதை மே மாதம் மூணரில் ஒரு ஆட்டோ டிரைவர் சொன்னது.ரூம் வாடகை Rs 6000 /- என்றவுடன் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் sir , இப்படி கொள்ளை அடிப்பதற்கு ஒரு நாள் ஆண்டவன் தண்டனை கொடுப்பான் கவலைப்படாதீர்கள் என்றார் நான் நம்பவில்லை .இதை பார்க்கும் பொழுது கடவுளே கொடுத்த தண்டனை. அந்த ஆட்டோ டிரைவர் வாழ்க .
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-ஆக-201807:16:01 IST Report Abuse
Darmavan இந்த போல குறிகிய எண்ணம் கொண்ட சுநலமிக்க கேரளத்துக்கு உதவி செய்ய வேண்டுமா என்பதே.எத்தனையோ மலையாளிகள் தமிழ் நாட்டில் வாழ்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X