ஆகம விதிகளை மீறி இரவில் பூஜை : இந்து அமைப்பு எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆகம விதிகளை மீறி இரவில் பூஜை : இந்து அமைப்பு எதிர்ப்பு

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: ஆகம விதிகளை மீறி அக்னி தீர்த்தத்தில் இரவில் பிண்ட பூஜை நடத்தியதற்கு, இந்து அமைப்பினர்எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆக.,10 மாலை 6:48 முதல் மறுநாள் மாலை 4:22 வரை ஆடி அமாவாசை இருந்ததால், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு ஆக.10ம் தேதி இரவு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.ஆக.,10 இரவு 7:00 மணி முதல் அக்னிதீர்த்த கடற்கரையில்அமர்ந்திருந்த வெளியூர் புரோகிதர்கள் தர்ப்பணம், சங்கல்பம், பிண்ட பூஜை நடத்தி, பக்தரிடம் நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலித்தனர்.ஆகம விதியை மீறி இரவில் (சூரியன் அஸ்தமனத்திற்கு பின்) செய்த பூஜையால் பக்தருக்கு பலன் இல்லை.பக்தர்களை ஏமாற்றி இரவில் பூஜை நடத்திய புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.மாநில வி.எச்.பி., கோயில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பக்ஷி.சிவராஜன் கூறுகையில்: சூரியன் அஸ்தமனத்திற்கு பின் இரவில் பூஜைசெய்தது ஆகம விதிக்கு முரணானது.இப்பூஜையால்பக்தருக்கு பலன் கிடைக்காது, பக்தரிடம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்ட வெளியூர் புரோகிதர்கள் மீதுஅக்னி தீர்த்த புரோகிதர் சங்க நிர்வாகிகள், அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஆக-201809:06:52 IST Report Abuse
Bhaskaran பணம் கொடுத்தால் வைதீக விதிகளை மீறி அதை மாற்றி காரியம் நிறைவேற்றித் தர ஒரு ப்ரோஹித்தர் கும்பல் எல்லா இடங்களிலும் உள்ளது இதனால் விவரம் தெரியாதவர்கள் ஏமாற்றுகிறார்கள், பலனே இருக்காது
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-ஆக-201808:06:28 IST Report Abuse
ஆரூர் ரங் கடற்கரைக்கு ஆகமவிதிகள் ஏது? அந்நிய நாட்டில் வசிப்பவர்கள் இரவு பகல் பார்த்தால் என்னாகும்? இறைவன் காலத்தைக் கடந்தவன் ஊண் உறக்கமற்றவன் . உண்மையான மனப்பூர்வமான வழிபாட்டை எப்போதுநடத்தினாலென்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X