சென்னையில் முற்றுகை: தொழிலாளர்கள் முடிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் முற்றுகை: தொழிலாளர்கள் முடிவு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செப்., 25ல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் முடிவு செய்துஉள்ளனர்.மதுரையில் இத்தொழி லாளர் சங்க மாநில மாநாடு 2வது நாளாக நேற்று நடந்தது. மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் சண்முகவேலு, பொருளாளர் புவனேஸ்வரன், சி.ஐ.டி.யு., பொதுச் செயலர் சுகுமாறன் பேசினர்.நிர்வாகிகள் கூறியதாவது: நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். கணினி துறையில் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படுவதில்லை. விடுமுறையும் கிடையாது. அவர்களுக்கு குறைந்த பட்சமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இத்துறையில் ஊழலை ஒழிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 25 சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X