அரசு விருந்தினர் மாளிகையா... அ.தி.மு.க., கட்சி அலுவலகமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு விருந்தினர் மாளிகையா... அ.தி.மு.க., கட்சி அலுவலகமா?

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காஞ்சிபுரம்:மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையை, அ.தி.மு.க.,வினர் கட்சி அலுவலகம் போல, சமீப காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கட்டடத்தில், காஞ்சிபுரம் வரும் அரசு உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள் தங்குவர். இவர்கள் தங்கி செல்வதற்காகவே இந்த விருந்தினர் மாளிகை உள்ளது.ஆனால், சமீப காலமாக, அரசு விருந்தினர் மாளிகை, அ.தி.மு.க.,வின் கட்சி அலுவலகம் போல் பயன்படுத்தி வருவதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், இதுகுறித்து கேட்க முடியாமல், அரசு உயரதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் கணேசன், கட்சி சம்பந்தமான அனைத்து ஆலோசனைகளையும், இந்த கட்டடத்திலேயே நடத்துவதாகவும், எந்நேரமும் கட்சியினர் தங்கும் விடுதியாக மாறிப்போயுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், அ.தி.மு.க.,வின் அம்மா பேரவை கூட்டத்தை, இந்த விருந்தினர் மாளிகை வளாகத்திலேயே, மேற்கு மாவட்ட செயலர் கணேசன் நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில், அமைப்பு செயலர் மைதிலி, சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ.,பழனி ஆகியோர் பங்கேற்றனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கட்சி கூட்டங்கள் நடைபெறுவதை, மாவட்ட ஆட்சியர் கண்டும் காணாமல் இருப்பதாகவும், அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது. அரசு விருந்தினர் மாளிகையை பயன்படுத்திக்கொள்ள தகுதி உள்ளவர்களை மட்டும், தங்க வைத்தால் மட்டுமே, அந்த வளாகம் முறையாக இயங்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X