ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி தஹிலரமானி பதவியேற்பு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி
தஹிலரமானி பதவியேற்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, விஜயா கம்லேஷ் தஹிலரமானி, நேற்று பதவியேற்றார். அவருக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஐகோர்ட்,புதிய தலைமை நீதிபதி,தஹிலரமானி,பதவியேற்பு



சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, சமீபத்தில் பதவியேற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, விஜயா கம்லேஷ் தஹிலரமானி நியமிக்கப்பட்டார்.


புதிய தலைமை நீதிபதிக்கு, கவர்னர் மாளிகையில், நேற்று பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது. விழா அரங்கிற்கு, புதிய தலைமை நீதிபதியை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அழைத்து வந்தார். ஜனாதிபதி

பிறப்பித்த நியமன உத்தரவை, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் வாசித்தார்.


பின், நியமன உத்தரவை, தலைமை நீதிபதியிடம் கவர்னர் வழங்கினார். இதைதொடர்ந்து, புதிய தலைமை நீதிபதிக்கு, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சி மேடையில், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த எச்.ஜி.ரமேஷ், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் அமர்ந்திருந்தனர்.


பதவியேற்பு நிகழ்ச்சியில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 11 நீதிபதிகள், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.


புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்றதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை, 63 ஆக உயர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75. தற்போது, தலைமை நீதிபதியையும் சேர்த்து, 12 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

Advertisement

36 ஆண்டுகள் சேவை :

புதிய தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானி மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1958ல் பிறந்தார். சட்டப் படிப்புக்கு பின் 1982ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி உள்ளார். அரசு பிளீடராகவும் குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவிவகித்துள்ளார். தன் 43 வது வயதில் 2001ல், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு மூத்த நீதிபதியாக, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். வழக்கறிஞரானது முதல் 36 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றி வருகிறார்.



நீதிபதிகளுக்கு பின் வரிசை :

கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பதவி ஏற்கும் விழாக்களில் அரங்கின் ஒரு பகுதியில் அமைச்சர்களும் மற்றொரு பகுதியில் நீதிபதிகளும் வழக்கமாக அமர வைக்கப்படுவர். ஆனால் நேற்று நடந்த தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் இந்த வரிசை மாற்றப்பட்டது. முன் வரிசையில் அமைச்சர்களும், அதன் பின் போலீஸ் அதிகாரிகளும், மூன்றாவது வரிசையில் நீதிபதிகளும் அமர வைக்கப்பட்டனர். விழா முடிந்த பின் தங்களுக்கு பின் வரிசை வழங்கியது குறித்து நீதிபதிகள் சிலர் தங்களது அதிருப்தியை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.



Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
16-ஆக-201810:50:11 IST Report Abuse

RAMASWAMY Sகாங்கிரெஸ் காங்கிரெஸ் CONGRATES

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஆக-201816:52:07 IST Report Abuse

இந்தியன் kumarநல்ல நேர்மையான தீர்ப்பை தாருங்கள். தமிழகம் உங்களை வரவேட்கிறது.

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
13-ஆக-201813:10:12 IST Report Abuse

தேச நேசன் ஒரு சிந்திப் பெண் தலைமை நீதிபதி என்பது அபூர்வம். வேலைக்குப்போவதே அபூர்வம். வணிகம் மட்டுமே எனும் சமூகத்தில் இப்படியும் ஒரு முற்போக்காளர். இங்குள்ள ஆபத்தான திராவிஷர்களைப் பற்றி முன்பே விசாரித்துதான் வந்திருப்பார். முதல் வழக்கு டிராபிக் ராமசாமி மெரீனா சமாதி கலாச்சாரத்தை எதிர்த்து போட்டது. திமுக மிரட்டலால் அவரது வக்கீல் சட்டவிரோதமாக வாபஸ் வாங்கினதும் நீதிபதி (குளுவாடி ரமேஷ்?) முடிவை எதிர்த்து போட்ட கேஸ். உடனே தஹீல் ரமாணி வழக்கை ஏற்காமல் பதிவாளரை அணுகச்சொல்லிவிட்டார். பிழைத்துக்கொள்வார் இந்த தஹீல்.திராவிஷ கலாச்சாரமும் ஆபத்தும் புரிந்தவரோ?

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X