ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி தஹிலரமானி பதவியேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி தஹிலரமானி பதவியேற்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி தஹிலரமானி பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, விஜயா கம்லேஷ் தஹிலரமானி, நேற்று பதவியேற்றார். அவருக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, சமீபத்தில் பதவியேற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, விஜயா கம்லேஷ் தஹிலரமானி நியமிக்கப்பட்டார். புதிய தலைமை நீதிபதிக்கு, கவர்னர் மாளிகையில், நேற்று பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடந்தது. விழா அரங்கிற்கு, புதிய தலைமை நீதிபதியை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அழைத்து வந்தார். ஜனாதிபதி பிறப்பித்த நியமன உத்தரவை, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் வாசித்தார்.பின், நியமன உத்தரவை, தலைமை நீதிபதியிடம் கவர்னர் வழங்கினார். இதைதொடர்ந்து, புதிய தலைமை நீதிபதிக்கு, கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.நிகழ்ச்சி மேடையில், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த எச்.ஜி.ரமேஷ், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் அமர்ந்திருந்தனர்.பதவியேற்பு நிகழ்ச்சியில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 11 நீதிபதிகள், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்றதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை, 63 ஆக உயர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75. தற்போது, தலைமை நீதிபதியையும் சேர்த்து, 12 பெண் நீதிபதிகள் உள்ளனர்.
36 ஆண்டுகள் சேவை : புதிய தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானி மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1958ல் பிறந்தார். சட்டப் படிப்புக்கு பின் 1982ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி உள்ளார். அரசு பிளீடராகவும் குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ளார். தன் ௪௩ வது வயதில் ௨௦௦௧ல், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு மூத்த நீதிபதியாக, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். வழக்கறிஞரானது முதல் 36 ஆண்டுகள் நீதித்துறையில் பணியாற்றி வருகிறார்.
நீதிபதிகளுக்கு பின் வரிசை : கவர்னர் மாளிகையில் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பதவி ஏற்கும் விழாக்களில் அரங்கின் ஒரு பகுதியில் அமைச்சர்களும் மற்றொரு பகுதியில் நீதிபதிகளும் வழக்கமாக அமர வைக்கப்படுவர். ஆனால் நேற்று நடந்த தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் இந்த வரிசை மாற்றப்பட்டது. முன் வரிசையில் அமைச்சர்களும், அதன் பின் போலீஸ் அதிகாரிகளும், மூன்றாவது வரிசையில் நீதிபதிகளும் அமர வைக்கப்பட்டனர். விழா முடிந்த பின் தங்களுக்கு பின் வரிசை வழங்கியது குறித்து நீதிபதிகள் சிலர் தங்களது அதிருப்தியை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X