தடுப்பணை அருகே மணல் கடத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணை அருகே மணல் கடத்தல்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொன்னேரி:மழைநீர் சேமிப்பு தடுப்பணை அருகே, இரவில் மணல் கடத்தல் நடக்கிறது.பொன்னேரி அடுத்த, ஆசானபூதுார்மேடு பகுதி யில், வஞ்சிவாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே, குடிநீர் வடிகால் வாரியம் மூலம், தடுப்பணை கட்டப்பட்டது.மழைக்காலத்தில், இந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. தற்போது, தடுப்பணை அருகே, இரவில் மணல் அள்ளப்படுகிறது. கால்வாய் பகுதியில், 20 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி, மணல் வெட்டி எடுக்கப்படுகிறது. மணல் கடத்தலால், தடுப்பணைக்கு ஆபத்து உருவாகி உள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படு வதுடன், தடுப்பணை அமைத்ததற்கான நோக்கமும் வீணாகும் என, கூறப்படுகிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தடுப்பணையில் மழைநீர் தேக்கி வைக்கப்படுவதால், அருகே உள்ள விவசாய நிலங்களில், ஆழ்துளை கிணறுகளும் நல்ல நிலையில் உள்ளன.தற்போது, தடுப்பணை பகுதியில் நடைபெறும் மணல் கடத்தலால், நிலத் தடி நீரைப் பாதுகாக்க முடி யாத நிலை ஏற்படுகிறது.மணல் கடத்தலைத் தடுக்கவும், அதில் ஈடுபடு வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X