மாணவர்களை ஏற்ற மறுக்கும்  அரசு பேருந்து பணியாளர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களை ஏற்ற மறுக்கும்  அரசு பேருந்து பணியாளர்கள்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தொழுப்பேடு:இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, அரசுப் பேருந்துகளின் ஊழியர்கள் அலட்சியம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெற்குணம், சிறுமைலுார், கொளத்துார், ஈசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ - மாணவியர், தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து படிக்கின்றனர். இப்பகுதி மாணவர் கள், தங்களுக்கான இலவச பேருந்து அனுமதிச் சீட்டைப் பெற்று உள்ளனர். ஆனால், இந்த மாணவர்களை ஏற்றாமல், அரசு பேருந்துகள் அலட்சியம் காட்டுவதாக மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாலை வேளைகளில் வீடு திரும்பும் மாணவர்கள் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இதனால் அரசு அளித்த பஸ் பாஸ் இருந்தும், தனியார் பேருந்துகளில் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டியுள்ளது என, மாணவர்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.பள்ளி நேரங்களில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பள்ளி அருகே பேருந்துகளை நிறுத்தி, மாணவர்களை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201802:16:12 IST Report Abuse
ஆப்பு ஓசீல எதக் குடுத்தாலும் வாங்கிடாதீங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X