கொட்டும் மழையில் கும்கிகளுடன் யானை தினவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொட்டும் மழையில் கும்கிகளுடன் யானை தினவிழா

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தேவாரம்: ''பல்லுயிர் பெருக்க சமநிலை பாதிக்காமலிருக்க யானை, புலிகளை பாதுகாப்பது நமது கடமை'', என்று தேவாரத்தில் கொட்டும் மழையில் நடந்த யானைகள் தின விழாவில் வனம் டிரஸ்ட் நிர்வாகியான கால்நடை டாக்டர் கலைவாணன் பேசினார்.தேவாரம் தோட்டப்பகுதியில் ஆட்கொல்லி யானையை பிடிக்க, டாப்சிலிப் காப்பகத்திலிருந்து கலிம், மாரியப்பன் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கி யானைகளின் வருகைக்கு பின் ஒற்றை யானையின் நடமாட்டம் இல்லை. அதன் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழுவினருடன் வனத்துறையினர் தமிழக--கேரள எல்லை பகுதியில் முகாமிட்டுள்ளனர். தொடர் மழை, மின்தடையால், சவுடம்மன் கோயில் தோப்பிற்கு கும்கி முகாம் மாற்றப்பட்டது. யானைகள் தினத்தை முன்னிட்டு கும்கி யானைகளுக்கு சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. டி.எப்.ஓ., கவுதமன், கால்நடை டாக்டர் கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் நுாற்றுக்கணக்கான மக்கள் கும்கி யானை முகாமிற்கு வந்தனர். கும்கி யானைகள் 'சர்க்கஸ்' செய்தன. சிறப்பு உணவால் 'டிரம்பட்' வாசிப்பது போன்ற ஒலியெழுப்பி யானைகள் உற்சாகமடைந்தன.டாக்டர் கலைவாணன் கூறியதாவது:வனவளம் சிறப்பாக இருந்தால், மக்கள் வாழ்வதற்கு தேவையான துாய்மையான காற்று, சுகாதாரமான நீர் கிடைக்கும். யானை, புலி உள்ளிட்ட விலங்குகள், மனித மோதல் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. இதனால் அவற்றை வனத்தை விட்டு வெளியேற்ற கோரிக்கை எழுகிறது. யானை வழித்தடத்தை அடர்ந்த வனத்தில் உள்ள சிறு விலங்கினங்கள் பாதையாக பயன்படுத்துகின்றன. வறட்சி காலத்தில் மரங்களின் துார் பகுதியில் உள்ள ஊற்றுகளை அறிந்து நீரை வெளியேற்றி தானும் குடித்து மற்ற விலங்குகள் குடிப்பதற்கு வசதி ஏற்படுத்தி தரும். வனத்தில் பல்லுயிர் பெருக்க சமநிலை சங்கிலி அறுந்து விடாமலிருக்க யானை, புலி வாழ்வது அவசியம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X