போலீஸ் டைரி.....| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி.....

Added : ஆக 13, 2018
Advertisement

கத்திமுனையில் பணம் பறித்தவன் கைதுவிழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர், இளையராஜா, 31. நேற்று முன்தினம் இரவு, சென்னை, மதுரவாயல் மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன், இளையராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, 3,000 ரூபாயை பறித்து தப்பினான்.இது குறித்து விசாரித்த மதுரவாயல் போலீசார், நொளம்பூரைச் சேர்ந்த சதீஷ்குமார், 31, என்பவனை, நேற்று காலை கைது செய்தனர்.40 மொபைல் போன்கள் திருட்டுபுளியந்தோப்பைச் சேர்ந்தவர், சுனில்குமார், 30; அதே பகுதியில் உள்ள, பேரக்ஸ் கேட் சாலையில், மொபைல் போன் கடை வைத்துள்ளார். நேற்று காலை, 6:15 மணிக்கு, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, அப்பகுதியில் உள்ளோர், சுனில்குமாருக்கு தகவல் அளித்தனர். கடையை திறந்து பார்த்த போது, மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 புதிய மொபைல் போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தன. புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.மொபைல் பறித்த வாலிபர் கைதுமெரினா கடற்கரை உள்ள கண்ணகி சிலை அருகே, முகேஷ், 23, என்பவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு நடந்து சென்றார். அப்போது வந்த ஒருவன், முகேஷின் மொபைல் போனை பறித்து தப்பியோடினான். அங்கு ரோந்து பணியில் இருந்த அண்ணா சதுக்கம் போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், மாற்றான்குப்பத்தைச் சேர்ந்த எபினேசர், 21, என, தெரிய வந்தது. அவனை கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.மருத்துவமனையில் 2 பைக் திருட்டு ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர், குமார், 30. கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர், ஹரிசங்கர், 32. இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த இவர்களது இருசக்கர வாகனம் திருடு போனது.ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர், மது, 19; சென்னை, ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர். இவர், நேற்று முன்தினம் மாலை, கல்லுாரி விடுதியின் மூன்றாவது மாடியில் நின்றபடி, மொபைல் போனில் பேசினார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X