மனைவி கொலை; கணவன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலை; கணவன் கைது

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிக்கரணை:கள்ளத்தொடர்பை துண்டிக்காத மனைவியை, அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, நாராயணபுரம், காந்தி நகரை சேர்ந்தவர், அய்யப்பன், 38; லாரி ஓட்டுனர். இவரது மனைவி, சுகந்தி, 32. இவர்களுக்கு, ஜெயஸ்ரீ, 10, வர்ஷினி, 8, ஆகிய குழந்தைகள் உள்ளன.முகலிவாக்கத்தை சேர்ந்த, ஒரு நபருடன், சுகந்திக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த ஆண்டு, கணவன், குழந்தைகளை பிரிந்து, அந்த நபருடன் தனியாக வசித்துள்ளார்.உறவினர்கள் பேச்சுக்கு பின், கள்ளத்தொடர்பை துண்டித்து, நான்கு மாதமாக, அய்யப்பனுடன் வசித்து வந்தார். ஆனால் மீண்டும், அதே நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். உறவினர்கள் கண்டித்தும், கள்ளத்தொடர்பை, சுகந்தி கைவிடவில்லை.இது தொடர்பாக, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், குழந்தைகள், அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்றனர். அன்று இரவு நடந்த தகராறில், ஆத்திரமடைந்த அய்யப்பன், அரிவாளால் சுகந்தி கழுத்தில் வெட்டி கொலை செய்து, தப்பி சென்றார்.பள்ளிக்கரணை போலீசார், உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். அய்யப்பனை நேற்று கைது செய்த போலீசார், அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X