போ லீ ஸ் டை ரி..| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போ லீ ஸ் டை ரி..

Added : ஆக 13, 2018
Advertisement

ஏலச்சீட்டு மோசடி: காவலர் தம்பதி கைதுசித்துார் மாவட்டம், திருச்சானுார், ராகவேந்திர நகரில் வசித்து வருபவர் யுவராஜ், 45. இவரது மனைவி அனுசுயா, 40. யுவராஜ், திருப்பதி க்யூ பிரிவு போலீசில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். காவலர் மற்றும் அவரது மனைவி அதே பகுதியில், 45 பேரிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம், சீட்டு பணம் கொடுத்து, சீட்டு முடிந்த நிலையிலும் பணத்தை திரும்பி தராமல் ஏமாற்றி வந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட, 45 பேரும் திருச்சானுார் போலீசில், சீட்டு பணத்தை காவலர் யுவராஜ், அவரது மனைவி அனுசுயா ஆகியோர் திருப்பி தராமல் அலைக்கழிக்கின்றனர் என, போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., அபிஷேக் மகந்தி, உத்தரவின் பேரில், திருச்சானுார் போலீசார் தலைமை காவலர் யுவராஜ், அவரது மனைவி அனுசுயா ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். மேலும், காவலர் தம்பதியினர் சீட்டு பணம் கொடுக்காததால் வீட்டை காலி செய்து தலைமறைவானர்.இந்நிலையில், நேற்று, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்தபோது பிடிபட்டனர். அவர்களிடமிருந்து, நகைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டுசித்துார் மாவட்டம், காளஹஸ்தி - ரேணிகுண்டா சாலை, ஏர்பேடு அடுத்த, பள்ளம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன், 40. இவர், நேற்று முன்தினம் இரவு, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு மூலவரை தரிசிக்க, வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் சென்றார்.நேற்று அதிகாலை, வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மர்ம நபர்கள் உடைத்திருந்தனர். இதை கண்ட மோகன், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து, அதிலிருந்த 700 கிராம் தங்கம், 3.80 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.பாம்பு தீண்டி இளைஞர் பலிவிஷப்பாம்பு தீண்டியதில், வீட்டின் அருகில் துாங்கி கொண்டிருந்த இளைஞர் இறந்தார்.பொன்னேரி அடுத்த, உப்புநெல்வாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் முத்து, 16. இவர், பழவேற்காடு கழிமுகப் பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரில், மீன்பிடித்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில், உறவினர் சிலருடன் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில், முத்துவின் காலை, விஷப்பாம்பு ஒன்று தீண்டி உள்ளது.சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக, அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு இறந்தார்.டூ - வீலர் திருட்டு: மூன்று பேர் கைதுஉத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர், மாகரல் உள்ளிட்ட பகுதிகளில், சில மாதங்களாக, இருசக்கர வாகனங்கள் அதிகம் திருடு போகின்றன. பெருநகர் போலீசார், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தினர். அதன் காட்சிகளை ஆய்வு செய்து, மானாம்பதியைச் சேர்ந்த ஜெபஸ்டின், 32 மற்றும் ஜாக்சன், 26, ஆகியோரை கைது செய்தனர். வாகன திருட்டில் தொடர்ந்து ஈடுபட்ட இவர்களிடமிருந்து, ஆறு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவர்களிடம், இருசக்கர வாகனங்களை வாங்கும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அஸ்ரப் அலி, 25, என்பவரையும் கைது செய்து, மூவரையும், செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.மோட்டார் சைக்கிள் விபத்து: வாலிபர் பலிஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஆயக்கொளத்துார், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 18. அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, 20, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுார் - - திருவள்ளூர் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றார். ஸ்ரீபெரும்புதுார் பக்தவத்சலம் நகர் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஆகாஷ் இறந்தார். கால் எலும்பு முறிவுடன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார்.லாரி மோதியதில் ஒருவர் பலிவேலுார் அடுத்த, கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர், 43; லாரி உரிமையாளர். இவர், தன், 'எய்ச்சர்' லாரியில், நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு மார்க்கமாக பயணம் செய்தார். லாரியை, வந்தவாசி அடுத்த, கொட்டை கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் ஓட்டினார்.பாலுச்செட்டி சத்திம் அருகே, சாலையோரமாக பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது, எய்ச்சர் லாரி மோதியதாக கூறப்படுகிறது. எய்ச்சர் லாரியில் பயணித்த சங்கர், சம்பவ இடத்திலேயே பலியானார்.மீனவர்கள் மோதல்: இருவர் காயம்மாமல்லபுரம், மீனவ பகுதி, கருங்குழி அம்மன், ஆடி உற்சவ விழா, நேற்று முன்தினம் நடந்தது. சுற்றுப்புற பகுதி மீனவர்கள் பங்கேற்றனர். விழா முடிந்து, நள்ளிரவு, 12:45 மணிக்கு, கோகிலமேடு, மெய்யூர் பகுதி மீனவர்கள், ஐந்து ரதங்கள் வழியே சென்று கொண்டிருந்தனர்.கடலில், செயற்கை பவளப்பாறை பகுதியில், மீன் பிடிப்பது தொடர்பாக, அவர்களிடையே பேச்சு எழுந்து, மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பினரும், சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கோகிலமேடு சதீஷ், 33, மெய்யூர் குமார் மகன் நித்யானந்தன், 26, ஆகியோர் காயமடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஓதியூரில் எரிசாராயம் பறிமுதல்செய்யூர் போலீசார், ரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். ஓதியூரில் வாகன சோதனை நடத்திய போது, ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட, 350 லிட்டர் எரிசாராயத்தைக் கண்டுபிடித்தனர். ஆட்டோவில் வந்த, ஞானமணி என்பவரை விசாரித்தனர். அதே பகுதியில் உள்ள காமாட்சி என்பவரின் வீட்டில், சோதனை செய்ததில் அங்கும், 7 கேன்களில் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது. மதுராந்தகம் கலால் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X