ரூ.15 லட்சம் நிலம் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.15 லட்சம் நிலம் மீட்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி:தனி நபர் ஒருவர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து, பயிரிட்டிருந்த, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வருவாய் துறையினர், நேற்று அதிரடியாக மீட்டனர்.திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம் பகுதியில், ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், சில ஆண்டுகளாக ஆக்கிரமித்து, பயிரிட்டு வந்தார்.இதையடுத்து, ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவு படி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி, திருத்தணி தாசில்தார் செங்கலா ஆகியோர் தலைமையில், சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேற்று சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்திற்கு நேரில் சென்றனர்.பின், தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து நெல் பயிரிட்டிருந்ததை அளந்து, ஒரு ஏக்கர் அரசு நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு, 15 லட்சம் ரூபாய் ஆகும். தொடர்ந்து, தனி நபர் ஆக்கிரமித்த நிலத்தில், வருவாய் துறையினருக்கு சொந்தமான இடம் என, அறிவிப்பு பலகை வைத்து மீட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X