ரயில் பயணியர் கூட்டம் ஒத்திவைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பயணியர் கூட்டம் ஒத்திவைப்பு 

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், நேற்று நடைபெறுவதாக இருந்த, ரயில் பயணியர் ஆலோசனை கூட்டத்திற்கு, ரயில்வே நிர்வாக அனுமதி கிடைக்காததால், 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில், மாணவர்கள், பணிபுரிவோர் என, தினமும், ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்த தடத்தில் கூடுதல் ரயில் இயக்காததால், பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.இதனால், கூடுதல் ரயில் இயக்க வேண்டும். குடிநீர், சுகாதாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பயணியருக்கான குறைகள் குறித்து, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு, கலந்துரையாடல் கூட்டம் நடக்கவிருந்தது.ஆனால், ரயில் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த, ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்காததால், நேற்று கூட்டம் நடைபெறவில்லை. இதனால், கூட்டத்திற்கு வந்தவர்கள் ரயில் நிலைய வளாகத்தில் ஆலோசனை செய்தனர். பின், 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கலாம் என, முடிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X