நகரில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் கலப்படம்:உணவுப்பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா| Dinamalar

தமிழ்நாடு

நகரில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் கலப்படம்:உணவுப்பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நகரில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் கலப்படம்:உணவுப்பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்குமா

மதுரை:மதுரை நகரின் பல பகுதிகளில் உணவுப்பொருட்களில் கலப்படம் மற்றும் காலாவதியானவை விற்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் நகரில் பல இடங்களில் சிறு தொழில் தயாரிப்புகளாக உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த உணவுப் பொருட்களின் தரம் எந்த ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இவை தொடர்பான ஆய்வுகளையும் உணவுப்பாதுகாப்புத் துறை முறையாக செய்வதில்லை.இரு நாட்களுக்கு முன் ஒரு இனிப்பு பாக்கெட்டில் இருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்ட மகபூப்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட இனிப்பு பாக்கெட்டை பெற்றோர் டாக்டரிடம் எடுத்துச் சென்றனர். அதில் எந்த முகவரியும் இல்லை. மதுரை என மட்டுமே இருந்தது.
இதுபோன்ற தயாரிப்புகள் மதுரையில் பல இடங்களில் தாராளமாக விற்பனையாகின்றன.இந்த தயாரிப்புகளுக்கு தேவையான மூலப் பொருட்களில் கலப்படமும் செய்வதால் தான் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது. உணவுப் பொருள் தயார் செய்யும் போது எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் என குறிப்பிட வேண்டும். ஆனால் குடிசைத் தொழிலாக, சிறுதொழில் நிறுவனங்களில் இருந்து தயாராகும் பொருட்களில் இந்த தகவல்கள் இடம் பெறுவதில்லை. இவற்றை தடுக்க உணவு பாதுகாப்பு உட்பட அரசுத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X