துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:வட சென்னையில் வாலாட்டி வந்த பிரபல ரவுடிகள், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் கணேஷ் ஆகியோர், துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை, பாரிமுனை, வி.ஆர்.என்., கார்டன் பகுதியைச் சேர்ந்தவன், காக்கா தோப்பு பாலாஜி, 38; பிரபல ரவுடி. இவன் மீது, ஏழு கொலை உட்பட வழிப்பறி, ஆள்கடத்தல் என, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில், ஜாமினில் வெளிவந்த காக்கா தோப்பு பாலாஜி, வட சென்னையில், மாமூல் வசூலிப்பு என, வாலாட்டி வந்தான். நேற்று முன்தினம், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, நேசன்,40 என்பவரிடம், கத்திமுனையில், 700 ரூபாய் பறித்துள்ளான். அவனை, முத்தையால்பேட்டை போலீசார் நேற்று, துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.அதேபோல், புளியந்தோப்பு அருகே உள்ள, சூளை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவன், கணேஷ், 32; பிரபல ரவுடி. இவன் மீது, நான்கு கொலை உட்பட கொலை முயற்சி மற்றும் வழிப்பறி என, 26 வழக்குகள் உள்ளன. ஒன்பது முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளான்.கடந்த, 2013ல், புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில், விஜய் என்பவரை கொலை செய்த வழக்கில், கணேஷ் முக்கிய குற்றவாளி ஆவான். இதனால், விஜயின் கூட்டாளிகள், கணேசை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இந்த தகவல், சில தினங்களுக்கு முன், ஜாமினில் வெளிவந்த கணேசுக்கு தெரியவந்தது. இதனால், உஷாரான அவன், தன் கூட்டாளி, டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த, சந்தோஷ் ராஜா, 30, என்பவனுடன் சேர்ந்து, விஜயின் கூட்டாளிகளை கொல்ல திட்டம் தீட்டி வந்தான். இருவரும், நேற்று முன்தினம், பயங்கர ஆயுதங்களுடன், புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் பதுங்கியுள்ளனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற, புளியந்தோப்பு போலீசார், கணேஷ் மற்றும் சந்தோஷ் ராஜா ஆகியோரை, துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது, கணேஷ் சிக்கினான். சந்தோஷ் ராஜா தப்பினான்; அவனை, போலீசார் தேடி வருகின்றனர்.வட சென்னையில் வாலாட்டிய, பிரபல ரவுடிகள், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் கணேஷ் ஆகியோர் கைதாகி இருப்பது, அப்பகுதி மக்களை நிம்மதியடைய செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X