கல் குவாரிகளை மறு ஏலம் விட முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல் குவாரிகளை மறு ஏலம் விட முடிவு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை;மதுரை மாவட்டத்தில் 39 கல் குவாரிகளை மறு ஏலம் விட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.இம்மாவட்டத்தில் முறைகேடு புகார்களையடுத்து கிரானைட் குவாரிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அரசு, தனியார் பயன்பாட்டிற்காக ஜல்லிக்கற்களை வெட்டி எடுக்க கல்குவாரிகள் மட்டும் ஏலம் விடப்படுகின்றன. கடந்தாண்டு வாடிப்பட்டி, மேலுார் உட்பட ஆறு தாலுாகாக்களிலுள்ள 41 கல் குவாரிகள் ஏலம் விடப்பட்டன. ஆனால் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகை அதிகம் இருப்பதாக கூறி ஏலதாரர்கள் சிண்டிகேட் அமைத்து ஏலம் எடுக்கவில்லை. இரு குவாரிகள் மட்டுமே ஏலம்போயின.
ஏலம் போகாத குவாரிகளுக்கு குறைந்தபட்ச தொகையை மறுபரிசீலனை செய்ய கோரி புவியியல், சுரங்கத்துறை துணை இயக்குனர் சிற்றரசு, உதவி இயக்குனர் விஜயராகவன் கலெக்டர் வீரராகவ ராவ் மூலம் அரசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி தொழில்துறை அதிகாரிகள் சில வழிகாட்டுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அந்த வழிகாட்டுதல்படி 39 கல் குவாரிகளை மறு ஏலம்விட புவியியல், சுரங்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X