கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்படுமா:ரயில்கள் நிற்கவும் பயணிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்படுமா:ரயில்கள் நிற்கவும் பயணிகள் எதிர்பார்ப்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:மதுரை கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தி பாண்டியன், வைகை உட்பட முக்கிய ரயில்கள் நிற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மதுரை ஸ்டேஷனில் பயணிகள் நெருக்கடியை தவிர்க்க முடியும்.
மதுரை ஸ்டேஷன் வழியாக தினமும் 90க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஸ்டேஷனுக்கு 35 ஆயிரம் பயணிகள் வந்து செல்வதால் நெரிசல் நிலவுகிறது. நகரின் அனைத்து பகுதி பயணிகளும் இங்கு வந்து ரயில் ஏறுகின்றனர். நெரிசலை தவிர்க்க மேற்குப்பகுதியில் அமைந்த கூடல்நகர் ஸ்டேஷனை மேம்படுத்தி ரயில்கள் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்டகாலமாக பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆதர்ஷ் ஸ்டேஷனின் அவலம்
கூடல்நகரை ஆதர்ஷ் ரயில்வே ஸ்டேஷனாக சில ஆண்டுகளுக்கு முன் நிர்வாகம் அறிவித்து வசதிகள் செய்யப்பட்டன. ஆனால் முறையான பராமரிப்பின்றி பயன்பாடற்ற நிலையில் உள்ளன. திண்டுக்கல், குருவாயூர், விழுப்புரம் பயணிகள் ரயில்கள் மட்டுமே தற்போது இங்கு நிற்கின்றன. ஸ்டேஷன் அருகில் செயல்பட்ட கான்கர் நிறுவனம் போதிய சரக்குகள் இன்மையால் மூடப்பட்டது. அருகிலுள்ள ரயில்வே குட்செட் மட்டும் செயல்படுகிறது. இங்கு கோதுமை, அரிசி, சிமென்ட், உரம் போன்றவை சரக்குரயில்களில் வந்த வண்ணம் உள்ளன. இதனால் தொழிலாளர்கள் 24 மணி நேரம் இங்கு வந்து செல்கின்றனர்.
படிக்கட்டுகள் சேதம்
ஆனால் கூடல்நகர் ஸ்டேஷனில் 24 பெட்டிகளுடன் கூடிய ரயில்களுக்கு ஏற்ப பிளாட்பார வசதியிருந்தும் மேற்கூரையில்லை. நடைபாதை மேம்பால படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. குடிநீர் சப்ளையில்லை. கூடல்நகரிலிருந்து ஸ்டேஷன் செல்லும் ரோடு குறுகலாகவுள்ளது. சில இடங்களில் புதர்கள் மண்டியுள்ளன. தெரு விளக்குகள் இல்லை. விஷப்பூச்சிகள் தொந்தரவு உள்ளது.
கூடல்நகரிலிருந்து புறப்பட்ட ரயில்கள்
சமூக ஆர்வலர் ராஜசேகர் கூறியதாவது: கூடல்நகர், விளாங்குடி, தபால்தந்திநகர், ஆனையூர் பகுதி மக்கள் தற்போது மதுரை ஸ்டேஷனுக்கு வருகின்றனர். இவர்கள் ஆட்டோ, பஸ்களில் செல்வதால் பணம், கால விரையமாகிறது. கூடல்நகர் ஸ்டேஷனில் பாண்டியன், வைகை உட்பட ரயில்கள் நின்றால் வசதியாக இருக்கும். மதுரையில் ரயில்வே லைன்களை மின்மயமாக்கும் பணிகள் நடந்த போது முக்கிய ரயில்கள் கூடல்நகரிலிருந்து புறப்பட்டன. அப்போது கூடல்நகர் ஸ்டேஷனுக்கு டவுன்பஸ்கள் இயக்கப்பட்டன. கூடல்நகர் ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளை செய்து ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X