சம்பளம் வழங்கக்கோரி 13வது நாளாக போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சம்பளம் வழங்கக்கோரி 13வது நாளாக போராட்டம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலுார்:பந்தலுார் அருகே கிளன்ராக் எஸ்டேட் தொழிலாளர்கள், சம்பளம் கிடைக்காததால் தொடர்ந்து 13-வது நாளாக நேற்றும் பஜாரில் போராட்டம் நடத்தினர்.பந்தலுார் அருகே கிளன்ராக் எஸ்டேட் செயல்பட்டு வருகிறது. இங்கு, 110- தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எஸ்டேட் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.பலமுறை சம்பளம் கேட்டும் கிடைக்காத நிலையில் நொந்துபோன தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1-ம் தேதி குன்னுார் தோட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் துறை ஆணையாளர் கிரிராஜ் தலைமையில் பேச்சு நடத்தது.
இதில், தொழிற்சங்க தலைவர்கள் ரமேஷ், சுப்ரமணி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதற்கு எஸ்டேட் நிர்வாகத்தினர் வராததால் தீர்வு கிடைக்கவில்லை.இதையடுத்து எஸ்டேட் அலுவலகம் முன் தொழிலாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை பந்தலுார் பஜாரில் தொழிற்சங்க தலைவர்கள் ரமேஷ் (சி.ஐ.டி.யு), பாலகிருஷ்ணன் (ஏ.ஐ.டி.யு.சி), சுப்ரமணி (எச்.எம்.எஸ்.,) ஆகியோர் தலைமையில் 13வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் சம்பளம் வழங்காத எஸ்டேட் நிர்வாகம், நடவடிக்கை எடுக்காத தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X