மழை பாதிப்பு: சேவா பாரதி உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்பு: சேவா பாரதி உதவி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி:கேரள மாநில வயநாடில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஊட்டி சேவா பாரதி அமைப்பு சார்பில், ஒரு லாரி முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டன.கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கன மழையால், பெரும்பாலான இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி, 30க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். வீடுகள் சேதமடைந்ததில், 2,000க்கு மேற்பட்ட மக்கள் வீடுகளின்றி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் உணவு, உடைகளின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கிளை அமைப்பான சேவா பாரதி அமைப்பினர் ஊட்டியில் உணவு பொருட்களை சேகரித்தனர்.
அரிசி, பிஸ்கட், கோதுமை, தண்ணீர் பாட்டில், உடைகள், கம்பளி உட்பட ஏராளமான பொருட்களை மாரியம்மன் கோவில் அருகே சேகரித்து வைத்தனர். நேற்று மாலை லாரி மூலம் அந்த பொருட்களை வயநாட்டிற்கு அனுப்பிவைத்தனர்.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் இருந்தும் சேவா பாரதி சார்பில் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X