'பிக் - அப்' வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒன்பது தொழிலாளர்கள் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பிக் - அப்' வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒன்பது தொழிலாளர்கள் காயம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி அருகே, 'பிக் -அப்' வாகனம் விபத்துக்குள்ளானதில், ஒன்பது தொழிலாளர்கள் காயமடைந்தனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து, கன்னேரிமுக்கு பகுதியில், கட்டட பணிக்காக, பிக்- அப் வாகனத்தில் தொழிலாளர்கள் சென்றனர். கோத்தகிரி ஓம்நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் ரூபக்குமார் வாகனத்தை இயக்கி சென்றார். கன்னேரிமுக்கு வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானது.அதில், வாகனத்தில் மேல் இருந்து தொழிலாளர்கள் துாக்கி வீசப்பட்டனர். சம்பவத்தில், கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்த ஞானசேகரன், 50, கேர்பெட்டா பகுதியை சேர்ந்த பார்வதி, 56 ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்கள், முதலுதவி சிகிச்சைக்கு பின், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.காயமடைந்த மற்ற தொழிலாளர்களான, ராமசாமி, 63, ஜெயமணி, 46, கந்தன், 50, தியாகராஜன், 26, பூவரசன், 20, ஜெயரத்தினம், 45, ராஜேந்திரன், 40, ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X