விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில், அதிக பாரம் ஏற்றி வந்தது உட்பட விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி விதிமீறிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி நிலை 1 மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி தலைமையில் வட்டார போக்குவரத்து ஊழியர்கள் குன்னுார், ஊட்டி பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.இதில், குன்னுார் பகுதியில் ஓவர் லோடு ஏற்றி வந்த 10 சக்கர லாரிகள் உள்ளிட்ட 21 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மொத்தம் ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.தொடர்ந்து ஊட்டி, எச்.பி.எப்., தலைகுந்தா பகுதிகளில் நடத்திய ஆய்வில், அதிக ஆட்களை ஏற்றி வந்த மேக்ஸி கேப் வாகனத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கர்நாடகாவில் இருந்து வாடகை வரி கட்டாமல் வந்த கார் டிரைவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் விதிமீறிய வாகனங்களுக்கு உடனடி அபராத தொகையாக 26 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. அதிக பாரம் ஏற்றி வந்த 26 வாகனங்கள், அதிக ஆட்களை ஏற்றி வந்த 8 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வரியாக ரூ.10 ஆயிரத்து 800, அபராத தொகையாக ரூ.41 ஆயிரத்து 800 உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் அபராத தொகையை செலுத்த சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X