'நான்-ஸ்டாப்' சேவை :திருப்பூருக்கு தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நான்-ஸ்டாப்' சேவை :திருப்பூருக்கு தேவை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:திருப்பூர் - உடுமலை வழித்தடத்தில், அதிகளவு 'நான் - ஸ்டாப்' பஸ்கள் இயக்கப்படும் நிலையில், கோவை வழித்தடத்தில், பஸ்கள் இயக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நடத்துனர் இல்லாத, 'நான்-ஸ்டாப் ' பஸ் சேவை, கடந்த மாதம் துவங்கியது. திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, உடுமலை, பழநி, பொள்ளாச்சி, சேலம் வழித்தடத்தில் மட்டும், 32 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்கள், புறப்படும் இடத்தில் துவங்கி, இடையில், எங்கும் நிற்காமல், சேருமிடம் சென்றடையும்.
திருப்பூர் - உடுமலை இடையே காலை, 6:45, 8:25, 9:00, 10:15, 10:50; மதியம், 12:05, 1:00, 1:35, 2:45; மாலை, 3:30, 4:50, 5:10, 6:40; இரவு, 7:25, 8:30, 8:55 மணிக்கு பஸ் இயக்கப்படுகிறது. திருப்பூர் - பழனி இடையே, காலை, 9:50, 10:40, 2:40, 3:55, 7:40, 9:40 மணிக்கு பஸ் இயக்கப்படுகிறது.திருப்பூர் - சேலம் இடையே, காலை, 10:20, 11:30. இரவு, 7:15, 11:00 மணிக்கு நான்கு பஸ்கள் உட்பட, மொத்தம், 32 'நான்-ஸ்டாப்' பஸ்கள் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது.
கோவை, ஈரோடுக்கு இல்லை
திருப்பூரில் இருந்து, பக்கத்து மாவட்டமான ஈரோடு, கோவைக்கு, தினசரி, அதிகளவு மக்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். திருப்பூர் - கோவை, ஈரோடு இடையே பயணிப்போரின் எண்ணிக்கை அதிகம். இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், கூட்டம் அலைமோதும். ஆனால், இவ்வழித்தடத்தில் 'நான்- ஸ்டாப்' பஸ் சேவை இல்லாதது, பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X