திறன்மிகு தொழிலாளர் திட்டம்:பயிற்சி மையம் அமைக்க தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறன்மிகு தொழிலாளர் திட்டம்:பயிற்சி மையம் அமைக்க தீவிரம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர்:சிறு தொழில் கழகம், 'நிப்ட்-டீ' கல்லுாரி இணைந்து, புவனேஸ்வரில் உருவாக்கியுள்ள பயிற்சி மையம், வரும் 30ல், இயக்கத்தை துவங்குகிறது.திருப்பூர், நிப்ட்-டீ கல்லுாரி, மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி, மாநிலம் முழுக்க பயிற்சி மையங்களை அமைத்து, தொழிலாளர் திறனை மேம்படுத்தி வருகிறது. நிப்ட்--டீ கல்லுாரியுடன் இணைந்து, பயிற்சி மையம் அமைக்க, அரசு துறைகள் ஆர்வம் காட்டி வருகின்றன.இதில், தேசிய சிறு தொழில் கழகம் (என்.எஸ்.ஐ.சி.,), நாடு முழுக்க பல்வேறு வகை தொழிலுக்கான பயிற்சி மையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. முதன் முறையாக, நிப்ட்--டீ கல்லுாரியுடன் இணைந்து, ஆயத்த ஆடை பயிற்சி மையத்தை, டில்லி மற்றும் புவனேஸ்வரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டமைப்புப்பணி முடிந்த நிலையில், வரும், 30ம் தேதி முதல் புவனேஸ்வர் பயிற்சி மையம், தனது இயக்கத்தை துவக்க உள்ளது. இம்மையத்தில், ஆயத்த ஆடை உற்பத்தி துறை சார்ந்த, அனைத்து வகை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சியாளர்களை உருவாக்குவது, பாட திட்டம் தயாரிப்பது உட்பட பல பணிகளை, நிப்ட்-டீ கல்லுாரி செய்து கொடுக்க உள்ளது.
கல்லுாரியின் திறன் மேம்பாட்டுத்துறை தலைவர் சிவஞானம் கூறுகையில்,''தேசிய சிறு தொழில் கழகம், நிப்ட்- டீ கல்லுாரியுடன் இணைந்து, முதற்கட்டமாக, புவனேஸ்வரில் பயிற்சி மையம் அமைக்க உள்ளது. பயிற்சி மைய இயக்கத்துக்கான நிதி உதவியை, எஸ்.எஸ்.ஐ.சி., வழங்கும்.''சிறு தொழில் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, நாடு முழுக்க பயிற்சி மையம் அமைத்து, திறன் மிக்க தொழிலாளர்களை, ஆடை உற்பத்தி துறைக்கு வழங்க நிப்ட்--டீ கல்லுாரி திட்டமிட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X