'டாஸ்மாக்' பணியாளரிடம் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' பணியாளரிடம் கொள்ளை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:காங்கயத்தில், 'டாஸ்மாக்' கடை ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர், அவரிடம் இருந்த பணத்தை திருடிச் சென்றது.திருப்பூர் மாவட்டம், காங்கயம் வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 47. காங்கயம், படியூர் ஒட்டப்பாளையத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல், கடையை பூட்டி விட்டு, விற்பனை செய்த பணத்துடன், டூ-வீலரில், வீட்டுக்கு சென்றார்; அவரது உறவினர் திவாகர், 22, உடன் பயணித்தார்.இரவு, 10:20 மணிக்கு படியூர் அருகே சென்றபோது, காரில் வந்த மர்ம நபர், இருவரையும் கீழே தள்ளி விட்டு, கத்தியை காட்டி மிரட்டி, சண்முகத்திடம் இருந்த, 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றார்.
காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்துக்கு அருகேயுள்ள கட்டடத்தில் உள்ள சி.சி. 'டிவி' பதிவை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர். கடந்த முதல் தேதி, நத்தக்காடையூர் புதுப்பாளையம் பிரிவு அருகே, 'டாஸ்மாக்' பணியாளரிடம், முகமூடி அணிந்து வந்த நபர்கள், 3.40 லட்சம் ரூபாயை கொள் ளையடித்து சென்றார்.இந்த நபரையே கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், மீண்டும், 'டாஸ்மாக்' பணியாளரிடம் கொள்ளை நடந்துள்ளது. இது, 'டாஸ்மாக்' ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X