கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர்:தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, திருப்பூர் மற்றும் அவிநாசியிலுள்ள பல்வேறு அமைப்பினர் சார்பில், அஞ்சலி, இரங்கல் கூட்டம், மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது.˜ திருப்பூர் மாநகர், தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. பழைய பஸ் ஸடாண்ட் எதிரே நடந்த கூட்டத்தில், கருணாநிதியின் படத்துக்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தலைவர் சுப்ரமணி, மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் வடிவேல், பொருளாளர் சபரீஸ்வரன், அமைப்பு செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
˜ திருப்பூர் மின்வாரிய ஓய்வூதியர் நல சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. அதன், தலைவர் குப்புசாமி, செயலாளர் ஜோசப்ரெசீஸ், பொருளாளர் கிட்டுசாமி கலந்து கொண்டனர். ˜ திருப்பூர், சாமுண்டி புரம், 11 வது வட்டார தி.மு.க., கிளை சார்பில், த.மா.கா.,வினர் அஞ்சலி செலுத்தினர். அவரது படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மண்டல தலைவர் பூபதி, 11 வது வட்டார தலைவர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ரத்தினவேலு, பிரபு, செல்வராஜ், ராஜராம், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.˜ அவிநாசி - அத்திக்கடவு திட்ட போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம், சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில், நடந்தது. அம்பலவாணன் தலைமை வகித்தார். கருணாநிதியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் நிர்வாகிகள், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.
˜ திருப்பூர், சாமுண்டிபுரம் பகுதியில் நடந்த, கருணாநிதி மறைவையொட்டி, நடந்த இரங்கல் நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். தி.மு.க., தலைவர் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ˜ தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவு, பேரிழப்பு. நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் உழைத்த தலைவர்,' என்று கூறியுள்ளனர்.
˜ திருப்பூர், சாணக்கியா மனுநீதி மக்கள் இயக்கத்தினர் கூறுகையில், 'கருணாநிதியின் மறைவு, வேதனை அளிக்கிறது. அவரது பணிகள் ஒவ்வொன்றும், எதிர்கால தலைமுறையினர் பேசும் வகையில் உள்ளது. மெரினா கடற்கரையில், நிரந்தர ஓய்வெடுக்கும், கருணாநிதி ஆத்மா சாந்தி அடையும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X