'பனியன்' நகரில் தற்கொலை அதிகம்!விரிவுபெறும் மனநல ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பனியன்' நகரில் தற்கொலை அதிகம்!விரிவுபெறும் மனநல ஆலோசனை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

திருப்பூர்:அதிகரிக்கும் தற்கொலையை தடுக்க, மனநல சிகிச்சையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், தினசரி, ஏதாவது ஒரு பிரச்னையோடு தான் வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது. குடும்ப பிரச்னை, அலுவலக பிரச்னை, கடன் சுமை என, பல்வேறு பிரச்னைகளின் அழுத்தம், ஒரு கட்டத்தில், தற்கொலைக்கு மனிதனை கொண்டு செல்கிறது.அதைத்தாண்டி, தவறான சகவாசம் போன்ற காரணங்களும், தற்கொலைக்கு காரணமாகிறது. மெத்த படித்தவர்கள் துவங்கி, படிக்காத பாமரர்கள் வரை தற்கொலை எண்ணம் என்பது, யாரையும் விட்டு வைப்பதில்லை.அதிலும், இயந்திரத்தனமான, இயந்திரத்தோடு சுழலும் திருப்பூர் மாநகர மக்களின் வாழ்க்கையில், 'தற்கொலை அதிகம்' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பின்னலாடை தொழிலில் முக்கிய பங்காற்றும் திருப்பூரில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், மதுரை, தேனி, நாகர்கோவில், விழுப்புரம் என, பிற மாவட்டங்கள், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, அசாம், உ.பி., போன்ற வெளி மாநிலங்கள், நைஜீரியா உள்ளிட்ட அயல் நாடுகளை சேர்ந்தவர்கள், தங்கி பிழைக்கின்றனர்.'தினசரி, மூன்று முதல், ஐந்து பேராவது தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்' என்பது, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரும் தகவல்.எண்ணிக்கை அதிகம்மாநகரில் கடந்த, 2014ல் ஆண்களில், 30 வயதுக்கு கீழ், 78 பேர், 30 வயதுக்கு மேல், 225 பேர், பெண்களில், 30 வயதுக்கு கீழ், 45, 30 வயதுக்கு மேல், 96 பேர் என, 444 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த, 2015ல் ஆண்களில், 30 வயதுக்கு கீழ், 85 பேர், 30 வயதுக்கு மேல், 230 பேர், பெண்களில், 30 வயதுக்கு கீழ், 55 பேர், 30 வயதுக்கு மேல், 95 என, 465 பேர்; 2016ல் ஆண்களில், 30 வயதுக்கு கீழ், 86 பேர், 30 வயதுக்கு மேல், 245 பேர், பெண்களில், 30 வயதுக்கு கீழ், 72 பேர், 30 வயதுக்கு மேல், 53 பேர் என, 456 பேர், தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.கடந்த, 2017ல் (ஜன., முதல் செப்., வரை) ஆண்களில், 30 வயதுக்கு கீழ், 64 பேர், 30 வயதுக்கு மேல், 131 பேர், பெண்களில், 30 வயதுக்கு கீழ், 41 பேர், 30 வயதுக்கு மேல், 42 பேர் என, 278 பேர், தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த, நான்காண்டில், திருமணமாகி ஏழு ஆண்டுக்குள் தற்கொலை செய்தவர்கள் 52 பேர். தற்கொலை செய்து கொண்டவர்களில், பெண்களை விட ஆண்களே அதிகம்; அதிலும், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அதிகம்.'மன அழுத்தமே இத்தகைய மரணங்களுக்கு காரணம்' என்ற நிலையில், மன அழுத்தம் குறைக்கும் மந்திரத்தை கற்றுக் கொடுக்க, அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநோய் ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை தவிர்த்து, அரசு மருத்துவமனைகளில் வாரத்தில் ஒரு நாள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் வாரத்தில் இரு நாள் மட்டுமே, மனநலப்பிரிவு செயல்படுகிறது.விரிவுபடுத்த திட்டம்திருப்பூர் மாவட்ட மனநல மருத்துவர் சுகன்யா கூறியதாவது;கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், பனியன் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் என, 40 இடங்களில் மனநல மேம்படுத்துதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மனநலப்பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது; அங்கு, மனநல மருத்துவர், ஆலோசகர் மற்றும் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்; மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.மாவட்ட மருத்துவமனையில் திங்கள், வெள்ளிக் கிழமையும், தாலுகா மருத்துவமனைகளை பொருத்தவரை, அவிநாசியில் வெள்ளி, பல்லடத்தில் வியாழன், உடுமலையில் செவ்வாய், தாராபுரத்தில் புதன் மற்றும் காங்கயத்தில் சனிக்கிழமைகளில் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.வரும் நாட்களில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாதம் ஒரு முறை மனநல ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும், 92 மருத்துவ அலுவலர், 245 கிராம சுகாதார செவிலியர்க்கு, மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது; அவர்கள், தங்களை தேடி வரும் மக்களுக்கு ஆலோசனை வழங்குவர். இவ்வாறு, சுகன்யா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X