சுதந்திர தினத்தில் குருதி கொடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தினத்தில் குருதி கொடை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அனுப்பர்பாளையம்:'முயற்சி' அமைப்பு சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஐந்து இடங்களில் ரத்ததான முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர், 'முயற்சி' மக்கள் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் பி.என்.,ரோடு தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிறுவன தலைவர் சிதம்பரம், தலைமை வகித்தார். செயலாளர் பரமசிவம், வரவேற்றார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையம், உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, தாராபுரம் அரசு மருத்துவமனைகளுக்காக சிறப்பு ரத்ததான முகாம், வரும், 15ம் தேதி, ஐந்து இடங்களில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, அவிநாசி ரோடு பெரியார் காலனி பரணி பெட்ரோல் பங்க் வளாகம், காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு மீனா பார்மஸி வளாகம், போயம்பாளையம் சரண் மெடிக்கல் சென்டர் வளாகம், பி.என்.,ரோடு 'முயற்சி' தலைமை அலுவலகம், பல்லடம் ரோட்டில் உள்ள பானு மருத்துவமனை வளாகத்தில், காலை 9:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை முகாம் நடத்துவது என, முடிவெடுக்கப்பட்டது.ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ரத்த தானம் செய்யும் அனைவருக்கும், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பாலிசி வழங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X