நிவாரணப் பொருட்கள் தொழில் துறையினர் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணப் பொருட்கள் தொழில் துறையினர் ஆர்வம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்;திருப்பூரிலிருந்து வெள்ள நிவாரணப் பொருட்கள், இன்று கேரளா அனுப்பி வைக்கப்படுகிறது.கேரளா மாநிலத்தில், கனமழை பெய்து வருகிறது. பலத்த மழையால், பாலக்காடு, இடுக்கி, கொல்லம், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு, தேவையான நிவாரண பொருட்களை பல்வேறு அமைப்பினர் வழங்கி வருகின்றனர்; உதவிக்கரம் நீட்ட, திருப்பூர் தொழில் துறையினரும் முன்வந்துள்ளனர்.
அதன்படி, உள்ளாடைகள், டீ சர்ட், பேண்ட் உள்ளிட்ட பின்னலாடைகளை, ஆடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தித்துறையினர் வழங்கியுள்ளனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள், பெட்ஷீட், போர்வைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. சேவாபாரதி சார்பில், முதற்கட்டமாக, இன்று பொருட்கள், கேரளா எடுத்து செல்லப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X