கலாசாரம் பாதுகாக்கும் 'எங்கள் பாரம்பரியம்':அரசு திட்டத்தில் இணைய வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலாசாரம் பாதுகாக்கும் 'எங்கள் பாரம்பரியம்':அரசு திட்டத்தில் இணைய வாய்ப்பு

Added : ஆக 13, 2018
Advertisement

திருப்பூர்;சிறுபான்மையின சமூகங்களின், உயர்ந்த பாரம்பரியம், கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்து டன், 'எங்கள் பாரம்பரியம்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.நாடு முழுவதும் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் நலனுக்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு கடன் உதவியும் வழங்கப்படுகிறது.
அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கான நிதியுதவி என, பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. சிறுபான்மையின மக்களின் உயர்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க, 'எங்கள் பாரம்பரியம்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம், சிறுபான்மையின மக்களின் இலக்கியம் மற்றும் கலாச்சார ஆவணங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆவணங்கள் மற்றும் சின்னங்களை பேணி பாதுகாக்க, இத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது. பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்புக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேற்கொள்ள, மத்திய அரசு, 100 சதவீதம் நிதி உதவி அளிக்கிறது.மாநில அரசின் தொல்லியல் துறை, சங்க பதிவு சட்டங்களில் பதிவு செய்து, பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பில், மூன்று ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் இத்திட் டத்தில் பயன்பெறலாம். நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக, இத்திட்டம் செயல்படுத்தப்படுமென, அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நலப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'சிறுபான்மையினத்தை சேர்ந்த, முதுகலை பட்டப்படிப்பில், 50 சதவீத மதிப்பெண் பெற்ற, ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர், இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழகத்தில், முழு நேர ஆராய்ச்சி படிப்பு பயில சேர்க்கை பெற்ற, 35 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபட, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் ஆண்டுக்கு, 28 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி வழங்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X