மாநில பூப்பந்து தகுதி போட்டி:மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 'சபாஷ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநில பூப்பந்து தகுதி போட்டி:மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 'சபாஷ்'

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்;விருதுநகர் மற்றும் நாகப் பட்டினத்தில் நடக்கும் மாநில பூப்பந்தாட்டதகுதி போட்டியில் பங் கேற்கும் வாய்ப்பை, திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பெற் றுள்ளனர்.மத்திய அரசின் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம், பள்ளி கல்வித்துறை இணைந்து, ஒவ்வொரு மண்டலத்திலும் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கிறது.
ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை ஒருங்கிணைந்த, கோவை மண்டல அளவிலான பூப்பந்தாட்ட தேர்வு போட்டி, கோவை ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளியில் நடந்தது. நான்கு வருவாய் மாவட்டங்களில் இருந்து, 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்; 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் தேர்வு போட்டிகள் நடந்தது.14 வயது மாணவர் பிரிவில், 72 பேர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, 9ம் வகுப்பு மாணவர் ஸ்ரீ ஹரிபிரசாத் தேர்வானார். இவர், அடுத்த மாதம், 9ல், விருதுநகர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் மாநில அளவிலான தேர்வு போட்டியில் பங்கேற்க உள்ளார்.
௧௯ வயது மாணவர் பிரிவில், 48 பேர் பங்கேற்றனர். இதில், சின்னச் சாமி அம்மாள் பள்ளி, பிளஸ் 2 மாணவர் கார்த்திக்ராஜா தேர்வானார். இவர், அடுத்த மாதம், 9ல் நாகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் நடக்கும் மாநில தேர்வு போட்டியில் பங்கேற்கிறார்.மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் துரை, உடற்கல்வி ஆசிரியர் பாலா ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X