மாணவர்கள் களப்பணி:ரயில்வே ஸ்டேஷன் 'பளிச்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் களப்பணி:ரயில்வே ஸ்டேஷன் 'பளிச்'

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், அரசு கல்லுாரி மாணவர்கள், ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை பணி மேற்கொண்டனர்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டுநலப்பணி திட்டம் அலகு-2 சார்பில், மத்திய அரசின் துாய்மை திட்டத்தின் கீழ், சுகாதாரம்சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் நிர்வாகத்துடன் இணைந்து, துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. ரயில்வே ஸ்டேஷன் உட்புறம் மற்றும் வெளிப்புறம், ஆங்காங்கே கிடந்த பிளாஸ்டிக் பைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது.
கல்லுாரி முதல்வர் ராமையா தலைமை வகித்தார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் சுனில்தத் முன்னிலை வகித்தார். துணை மேலாளர் முத்துகுமார், சுகாதார ஆய்வாளர் பர்வேஸ் ஆலம் ஆகியோர், சுகாதாரம் குறித்து பேசினர். முன்னதாக, நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X