அரிய வகை பறவையினங்களை அழித்து...நன்மைக்கும் செய்கிறோம் தீமை!இயற்கை வேளாண்மையே இனிக்கும் வழி| Dinamalar

தமிழ்நாடு

அரிய வகை பறவையினங்களை அழித்து...நன்மைக்கும் செய்கிறோம் தீமை!இயற்கை வேளாண்மையே இனிக்கும் வழி

Updated : ஆக 13, 2018 | Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
 அரிய வகை பறவையினங்களை அழித்து...நன்மைக்கும் செய்கிறோம் தீமை!இயற்கை வேளாண்மையே இனிக்கும் வழி

ஆனைமலை:விவசாயத்தில் அதிகப்படியான ரசாயன உரம் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால், வாழ்விடம், உணவின்றி அலைமோதி, மரபணு மாற்றமடைந்து, அரிய வகை பறவைகள் அழிந்து விட்டன.பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட விவசாயம் பிரதானமாக உள்ள பகுதிகளில், விளை நிலங்களிலுள்ள பூச்சிகள், ஈசல், தட்டான்பூச்சி, சிலந்தி, புழுக்களை சாப்பிட கொண்டலாத்தி, தேன்சிட்டு, கருப்பு வெள்ளை வாலாட்டி, கருச்சான் குருவி, வெண்புருவக் கொண்டலாத்தி உள்பட பலவகை பறவைகள் வலம் வரும்.அதேபோல், தோட்டத்திலிருக்கும் எலி, பல்லியை சாப்பிட வெண்கொண்டை மீன்கொத்தி உள்ளிட்டவையும் வரும்.
இவை, விவசாய நிலத்தில் பயிர்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுத்தாமல், பூச்சிகளை சாப்பிட்டு நன்மை செய்கின்றன.அதேபோல், பழவகை மரங்களில் பழங்களை கொத்தி சாப்பிட வால்காக்கை, கிளிகளும் வரும். இவற்றின் கழிவுகளில் உள்ள விதைகள் மூலம் ஆங்காங்கே மரங்கள் துளிர்க்கும். இப்படி சூழல் பாதுகாவலர்களாக உள்ள பறவைகள், மனிதர்களின் அறியாமையால் நாளுக்கு நாள் அருகிவருகின்றன.
தோட்டத்தில் நைட்ரஜன் சத்துக்காக யூரியா, களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, உயிர் ஊக்கி உள்பட பலவகைகளில் விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால், தோப்பிலுள்ள சிலந்தி, வெட்டுக்கிளி உள்ளிட்ட பூச்சிகள், வண்டுகள் என அனைத்தும் இறக்கிறது. எனவே, பறவைகள் உணவு கிடைக்காமல், இறந்து, அதன் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது.
ரசாயன உரத்தால் மண் மலட்டுத்தன்மையை அடைவதுடன், விளைபொருட்கள் நச்சுத்தன்மை பெற்று மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.அதேபோல், விவசாய நிலங்கள் குடியிருப்பாக மாறுவதும், மனித வாழ்விடங்களில் பப்பாளி, சீத்தா, மாதுளை உள்ளிட்ட பழவகை மரங்கள் வளர்ப்பு குறைந்துவருவதும், பறவைகள் குறைவதற்கான காரணமாக உள்ளது. பறவைகளுக்கு உணவு கிடைக்கும் வகையிலான, பழவகை மரங்களை மனித வாழ்விடங்களில் வளர்க்க வேண்டும். விவசாயிகள் ரசாயன உரம் பயன்படுத்துவதை கைவிட்டு, பாரம்பரிய முறையில் இயற்கை மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அழிந்துவரும் பறவைகளை பாதுகாக்கலாம்.
மரபணுவில் மாற்றம்!
கோவை ஆனைகட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் அஜீஸ் கூறியதாவது:ரசாயன உரத்தை பயன்படுத்திய நிலத்திலுள்ள வெட்டுக்கிளி, பூச்சிகளை சாப்பிடும் பறவைகளுக்கு, ரசாயனத்தின் வீரியத்தால் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, புதியதாக பிறக்கும் பறவையின் வளர்ச்சி தாமதமாகும்.
பூச்சிகள் உள்ளிட்டவை இறந்து போவதால், பறவைகள் உணவுக்காக அலைமோதுகின்றன. ரசாயன உரத்தால் பாதித்த பறவை பறப்பது, உணவு தேடுவது உள்ளிட்ட வாழ்க்கை சுழற்சியில் சரியாக செயல்பட முடியாது. பழவகை மரங்கள் வீடுகளில் குறைந்துவருவதால், பல்வேறு பறவைகள் வாழ்விடம் அமைக்க முடியாமல், உணவு கிடைக்காமல் அவற்றின் எண்ணிக் கை குறைகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X