மனைப்பிரிவு ஆவணங்கள் பதிவில் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனைப்பிரிவு ஆவணங்கள் பதிவில் மாற்றம்

Added : ஆக 13, 2018
Advertisement

பொள்ளாச்சி:'சார் பதிவாளர் அலுலகங்களில், மனைப்பிரிவு ஆவணங்களை பதிவு செய்வதில் இன்று முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது,' என பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளின் ஆவணங்களை பதிவின்போது பயன்படுத்துவது தொடர்பான புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. பதிவுத்துறை அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:கடந்த, 2016ம் ஆண்டு, அக்., 20ம் தேதிக்கு முன்பாக வீட்டு மனையாக பதிவு செய்யப்பட்டவற்றை அங்கீகரிக்கப்பட்ட மனைகளாக பதிவு செய்யலாம் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற ஆணை மற்றும் பதிவுச்சட்டம் பிரிவு, 22ஏ சாரம்சத்தின் படி பதிவு அலுவலர்கள் சரிவர செயல்பட்டுள்ளனரா என்பதை சரிபார்த்து அனுப்ப, அனைத்து தணிக்கை மாவட்ட பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு தணிக்கையின் போதும் மனைப்பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது இரண்டாவது பதிவு போன்ற விபரங்களை சரிபார்த்து அனுப்புவது மாவட்ட பதிவாளரின் கடமையாகும்.இவ்வாறு சரிபார்ப்பதற்கு மனைப்பிரிவு அங்கீகரிக்கப்பட்ட உத்தரவின் நகலை ஒவ்வொரு பதிவு அலுவலரிடம் இருந்தும் மாவட்ட பதிவாளர்கள் (தணிக்கை) கேட்டு பெற வேண்டியதுள்ளது.அந்த நகலை பதிவு அலுவலர் அளிக்காத நிலையில் அல்லது சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர் வேறு அலுவலகத்திற்கு மாற்றலாகியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மனையையும் தவறுதலாக அங்கீகரிக்கப்படாத மனையாக குறிப்புரை எழுதும் நிலை எழுகிறது.
இதனை தவிர்க்க இத்தகைய மனைகள் குறித்த ஆவணங்கள் வரும் காலங்களில் பதிவுக்காகத்தாக்கல் செய்யும் போது அங்கீகார உத்தரவு நகலை ஆவணத்துடன் இணைக்க வேண்டும். இந்த உத்தரவு நகலை, ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதால், அந்த நகலில் அனைவரும் கையொப்பம் செய்ய வேண்டும். அசல் ஆணையை ஆவணத்துடன் இணைக்க கட்டாயப்படுத்தக்கூடாது.இந்த ஆணையின் நகலை பதிவு செய்யப்பட்ட ஆவணத்துடன் இணைத்து ஒளிவருடல் செய்யப்படுவதால் எதிர்காலத்தில் சொத்து வாங்குபவர்களுக்கும் பயனுடையதாக இருக்கும். இந்த புதிய நடைமுறை, 13ம் தேதி முதல் (இன்று முதல்) நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X