தொடர் மழையால் வெறிச்சோடும் வாரச்சந்தை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் வெறிச்சோடும் வாரச்சந்தை

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொள்ளாச்சி;ஒரு மாதமாக பெய்யும் தொடர் மழையால், கிராம சந்தைகளில் விற்பனை மந்தமடைந்து, வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.போக்குவரத்து வசதி அதிகமில்லாத காலங்களில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் வாரச்சந்தை நடப்பது வழக்கம்.நகருக்கு போக்குவரத்து வசதி மேம்பட்ட பிறகு, கிராம மக்கள் நகருக்கு வந்து செல்வது சாதாரணமாக மாறியது.
தேவையான பொருட்களை நகரிலேயே வாங்கிச் செல்ல துவங்கினர். இதனால், கிராமச் சந்தைகள் வழக்கொழிய துவங்கின.கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பு சிறு வியாபாரிகள் சோதனை முறையில் கிராமங்களுக்கே சென்று சந்தை அமைக்க துவங்கினர். அந்த முயற்சிக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால் பல்வேறு கிராமங்களுக்கும் வாரச்சந்தை விரிவடைய துவங்கியது.தற்போது, நல்லுார், கோபாலபுரத்தில் திங்கட்கிழமை; உடுமலை ரோடு கோலார்பட்டியில் செவ்வாய் கிழமை; மாக்கினாம்பட்டி, தொழில்பேட்டை, பூசாரிபட்டியில் புதன் கிழமை; வடக்கிபாளையம், டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் வியாழக்கிழமை; புளியம்பட்டியில் வெள்ளி கிழமை; சின்னாம்பாளையத்தில் சனிக்கிழமை; ஊஞ்சவேலாம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை என வியாபாரிகள் வாரச்சந்தை அமைக்கின்றனர்.
இந்த சந்தைகளில் காய்கறிகள் அதிகளவிலும், மளிகைப் பொருட்கள் ஓரளவுக்கு விற்பனையாயின.இந்நிலையில், கடந்த மாதம் இருந்து தென்மேற்கு பருவமழை துவங்கியது. ஆரம்பத்தில் லேசாக இருந்த மழை, கடைசி வாரத்தில் வலுக்க துவங்கியது.தொடர் மழை பெய்வதால், கிராமங்களில் சந்தை அமைப்பது வியாபாரிகளுக்கு சவாலாக மாறியது. சிரமப்பட்டு கடை போட்டாலும், மழைக்கு பயந்து மக்கள் கூட்டம் வருவது பெருமளவு குறைந்தது. இதனால், விற்பனை குறைந்து போனது. ஆடிப்பெருக்கு விழாவுக்கு பிறகு மழை குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஆடி அமாவாசை தாண்டியும் மழை தொடர்வதால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X