தமிழிசை நாட்டிய விழா: அசத்தும் கலைஞர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழிசை நாட்டிய விழா: அசத்தும் கலைஞர்கள்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் தமிழிசை சங்கத்தின் நாட்டிய விழாவில், கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.தமிழிசை சங்கம் சார்பில், 33ம் ஆண்டு நாட்டிய விழா, பல்லடம் ரோடு கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடக்கிறது. நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கோல்கட்டாவைச் சேர்ந்த மோகுல் முகர்ஜியின், பரதநாட்டியம் அரங்கேற்றம் நடந்தது. தொடர்ந்து, இரவு, 7:30 மணிக்கு, சென்னை சாய்ராம் சந்தானம் மற்றும் கோவை ஹம்ஸிகா மணியின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த பரத நாட்டிய நிகழ்ச்சியில், கலைஞர்கள் திறமையை வெளிப்படுத்தி நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். தொடர்ந்து, 15ம் தேதி வரை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குழுவினர் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X